‘வாரிசு’ படத்தை பார்த்து கண்கலங்கிய தந்தை... உணர்ச்சிக்கரமான வீடியோவை பகிர்ந்த வம்சி !

varisu

‘வாரிசு’ படத்தை பார்த்து தனது தந்தை கண்கலங்கிய வீடியோ இயக்குனர் வம்சி வெளியிட்டுள்ளார். 

தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் பொங்கலையொட்டி கடந்த 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது. 

varisu

ஆனால் தெலுங்கில் சில காரணங்களால் இன்று தான் வெளியானது. தமிழை போன்று இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளனர். திரையரங்குகளில் ரசிகர்கள் விஜய்யை பார்த்தவுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரு மொழிகளிலும் ‘வாரிசு’ திரைப்படம் வெற்றிப்பெற்றுள்ளதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். 

varisu

‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சியின் அப்பா மற்றும் குடும்பத்தினர் இன்று திரையரங்கில் பார்த்தனர். இது குறித்து நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் வம்சி வெளியிட்டுள்ளார். அதில், வம்சியின் தந்தை ‘வாரிசு’ படத்தை பார்த்து கண்கலங்கியபடியே அவரை கட்டியணைக்கிறார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று எனது அப்பா ‘வாரிசு’ படத்தைப் பார்த்து நெகிழ்ந்ததே என மிகப்பெரிய சாதனை. என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் தருணம் இது. நீங்கள் தான் என் ஹீரோ. லவ் யூ அப்பா என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 


 

Share this story