திடீரென ஒத்தி வைக்கப்பட்ட ‘வாரிசு’ தெலுங்கு வெர்ஷன்.. காரணம் என்ன ?

varisu

 விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் திட்டமிட்ட வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது 

varisu

இந்நிலையில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ ரிலீசில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தில் ராஜூ, சங்கராந்தி பண்டிகை அன்று தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களான வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய படங்கள் வெளியாகிறது. 

அதனால் ‘வாரசுடு’ படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளோம். அதன்படி ‘வாரசுடு’ படம் 11-ஆம் தேதிக்கு பதிலாக 14-ஆம் தேதி வெளியாகும். பட வெளியீடு தள்ளிப்போவதால் தெலுங்கு வெர்ஷனின் வசூல் குறையாது என்றார். அதேபோன்று தமிழில் வெளியாகும் ‘வாரிசு’ படம் நிச்சயம் வெற்றிப்பெறும் என நம்பிக்கையுடன் உள்ளோம் என்று கூறினார். 

 

Share this story