‘வாரிசு’ 7 நாளில் 210 கோடி வசூல்.. உண்மையென்னா ?... போட்டுடைத்த திருப்பூர் சுப்ரமணியன் !

varisu

‘வாரிசு’ வசூல் நிலவரம் உண்மையென்னா என்ற தகவலை திருப்பூர் சுப்ரமணியன் விளக்கியுள்ளார். 

விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த 11-ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியானது. இதில் ‘வாரிசு’ திரைப்படம் 7 நாளில் 210 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மை என்ன என்பது குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 

varisu

இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், வாரிசு திரைப்படம் 7 நாளில் 210 கோடி வசூலிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ரசிகர்களை திருப்திப்படுத்தவே இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். தமிழகத்தில் மட்டும் ‘வாரிசு’ படத்தின் வசூலை லலித் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் மற்ற மாநிலங்களின் வசூல் நிலவரம் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர் முழு வசூல் விபரத்தை கொடுக்க மாட்டார்கள். 

varisu

இப்படி இருக்கையில் எப்படி இவ்வளவு தொகை வசூலித்தது என்று அறிவித்தார்கள் என்று தெரியவில்லை. அதனால் ‘வாரிசு’ வசூல் குறித்து தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு. வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் சரி சமமாக வசூலித்து வருகிறது. இரண்டு படத்திற்கும் 5 சதவீதம் தான் வசூல் வித்தியாசம் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். 

 

 

Share this story