யாருக்கு எவ்வளவு சம்பளம் ?.. ‘வாரிசு’ படத்தின் அப்டேட்

varisu

‘வாரிசு’ படத்தில் நடித்த நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் பெங்கலையொட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி ஹவுஸ்புல்லாகிவிட்டது. 

varisu

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் குறித்த சம்பள விபரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி ரூபாய் என சொல்லப்படும் நிலையில் அதில் விஜய்க்கு மட்டும் 110 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஷ்மிகாவிற்கு 4 கோடியும், சரத்குமாருக்கு 2 கோடியும், பிரபுவிற்கு 2 கோடியும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். 

varisu

அதேபோன்று பிரகாஷ் ராஜூக்கு 1.5 கோடியும்,  ஷாமுக்கு 1 கோடியும், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துக்கு 60 லட்சமும், குஷ்பூவிற்கு 40 லட்சமும், யோகிபாபுவிற்கு 35 லட்சமும், ஜெயசுதாவிற்கு 30 லட்சமும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதுதவிர இயக்குனர் வம்சி படைப்பள்ளி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோரின் சம்பளம் விபரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story