'வாரிசு' படத்தில் குஷ்பூ எங்கே ?... ட்ரோல் செய்யும் ரசிகர்கள் !

varisu

'வாரிசு' படத்தில் குஷ்பூவின் கதாபாத்திரம் என்னவாயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தெலுங்கு முன்னணி வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் வெளியாகி உள்ளது. தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று அதிகாலை திரையரங்குகளில் வெளியானது. குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். 

varisu

 இதற்கிடையே நடிகை குஷ்பூ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியானது. இதை 'வாரிசு' ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை விஜய்யே உறுதிப்படுத்தியிருந்தார். அந்த விழாவில் பேசிய விஜய், நடிகை குஷ்பூவுக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும், அது அழுத்தமான கதாபாத்திரம் என்று கூறியிருந்தார். இதுதவிர விஜய்யுடன் குஷ்பு இருக்கும் புகைப்படங்களையும் 'வாரிசு' படக்குழு வெளியிட்டிருந்தது. 

varisu

இந்நிலையில் 'வாரிசு' திரைப்படத்தை நேற்று பார்த்த ரசிகர்கள் குஷ்புவின் ஒரு காட்சி கூட இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் இதை இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கிடையே 'வாரிசு' படத்தில் குஷ்பூ நடித்தது உண்மைதான் என்றும், படத்தின் நீளம் அதிகமானதால் குஷ்பூ நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Share this story