வாரிசா.. துணிவா... எந்த படம் பார்ப்பீங்க... நிருபர் கேள்விக்கு சந்தானம் சொன்ன பதில் !

santhanam

வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களில் எந்த படத்தை பார்ப்பீங்க என நிருபர் கேட்ட கேள்விக்க நடிகர் சந்தானம் சுவாரஸ்சியமான பதிலை அளித்துள்ளார். 

விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கில் வெளியாவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

varisu

வாரிசு படத்தின் வெளியீட்டு சிக்கலுக்கு காரணம் பண்டிகை நாட்களில் தெலுங்கு படம் மட்டும் வெளியாக வேண்டும் என்றும் பிறமொழி திரைப்படங்கள் வெளியாகாது என்றும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் தான் வாரிசு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தான்,  'வாரிசு' படத்தை தயாரித்து வருவதால் வெளியீட்டு பிரச்சினையை சரி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சந்தானத்திடம்,. 'வாரிசு' படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தானம், இந்த பிரச்சனையை அவர்கள் பேசி முடிவு செய்வார்கள். இங்கே இருந்து கொண்டு நாம் அந்த பிரச்சனைக்கு முடிவு சொல்ல முடியாது. அது வேறு மொழி, வேறு மாநிலம். படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு என்பதால் பிரச்சினையை பேசி முடிப்பார் என்றார். 

நாம் மற்ற மொழி படங்களுக்கு ஆதரவு தரும்போது அவர்களும் தமிழ் படங்களுக்கு ஆதரவு தரவேண்டும். விஜய்யின் வாரிசு படத்திற்கு என்னுடைய ஆதரவு நிச்சயம் உண்டு என்றார். மேலும் வாரிசு, துணிவு இரு படங்களில் எந்த படத்தை பொங்கலுக்க பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு இரண்டையும் பார்ப்பேன் என்று கூறினார். 

Share this story