அடுத்த சரவெடி ஆரம்பம்... ‘வாரிசு’ இரண்டாம் சிங்கிள் குறித்து மாஸ் அப்டே

varisu

 விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தில் முதல்முறையாக விஜய் நடித்துள்ளார். ‘வாரிசு’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை வம்ஷி படைப்பள்ளி இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

varisu

இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடும் இப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்கிற்கு வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளது.

varisu

தமன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகிறது. அதில் ஏற்கனவே முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இரண்டாவது பாடல் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய்யின் 30வது சினிமா வாழ்வின் நிறைவையொட்டி இப்பாடல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story