அரசியல் நெடி வீசும் ‘வாரிசு’ டிரெய்லர்.. தூள் பறக்கும் வசனங்கள்.. அப்போ அது கன்பார்மா ?

varisu

‘வாரிசு’ படத்தில் அரசியல் நெடி வீசும் வசனங்கள் அதிகம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஜய். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளில் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளார். தற்போது தமிழில் நெம்பர் ஒன் மார்க்கெட்டை வைத்துள்ள அவர், 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. 

varisu

சினிமாவில் பிரபலமான இருக்கும் விஜய், விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் அவரது நடவடிக்கைகளும் இருக்கிறது. விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை விஜய் செய்து வருகிறார். அதேநேரம் அவ்வெவ்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். 

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது. இதில் அரசியல் நெடி வீசும் வசனங்கள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பவர் சீட்ல இருக்காது சார்.. அதுல வந்து ஒருத்தன் உட்காருறான்ல அவன் கிட்டதான் இருக்கும்.. நம்ம பவர் அந்த ரகம் என அதிரடியாக பேசும் வசனங்கள் தூள் பறக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் நடிகர் விஜய் 2024 தேர்தல் மனதில் வைத்தே இதுபோன்ற வசனங்களை படத்தில் பேசியுள்ளார் என்று ட்ரோல் செய்து வருகின்றனர். 

 

Share this story