லண்டன் வீதிகளில் ‘வாரிசு’ போஸ்டர்.. வேற லெவலில் ப்ரோமோஷன் !

varisu

லண்டன் வீதிகளில் ‘வாரிசு’ படத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

varisu

தளபதி விஜய்யின் நடிப்பில் மாஸாக உருகியுள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியிடப்படவுள்ளது. வரும் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் தமன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி தூள் கிளப்பியுள்ளது. 

varisu

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடவுள்ளது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

varisu

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. அந்த வகையில் பிரபல திரையரங்கு நுழைவு வாயிலில் 'வாரிசு' போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில்களில் 'வாரிசு' விஜய்யின் மாஸான போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் லண்டன் மாநகர வீதிகளில் இப்படத்தின் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Share this story