சிம்பு பாடிய “காலத்துக்கு நீ வேணும் பாடல்“... ‘வெந்து தணிந்தது காடு’ முதல் பாடல் வெளியீடு

Vendhu Thanindhathu Kaadu

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு பாடிய பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள காதல் ஓவியம் ‘வெந்து தணிந்தது காடு’. கௌதம் மேனனின் மற்ற காதல் படங்கள் போன்று இந்த படமும் மென்மையாக இருக்கும் என தெரிகிறது. கௌதம் மேனனுடன் சிம்புவும் இணைந்துள்ளதால் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

simbu

இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

simbu

இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ‘காலத்திற்கு நீ வேணும்’ என தொடங்கும் இந்த பாடலை சிம்பு மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர். கவிஞர் தாமரையின் வரிகளில் மெலோடி பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. காதலை மிகவும் மென்மையாக உணர்த்தும் விதமாக உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.  

Share this story