அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகலா.. புதிய இயக்குனர் யார் ?

ak 62

 அஜித்தின் ‘ஏகே 62’ படத்திலிருந்து இயக்குனர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்தடுத்து தொடர்ந்து 3 படங்களில் எச் வினோத்துடன் கூட்டணி அமைத்திருந்தார் அஜித். நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்கள் இந்த கூட்டணியில் வெளியானது. அதில் ‘துணிவு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைப்பதாக கூறப்பட்டது.

ak 62

இந்த படத்திற்கான பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்தது. வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல் வெளியான நிலையில் விக்னேஷ் சிவன், இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் விக்னேஷ் சிவனின் கதையில் அஜித்திற்கு திருப்தியில்லை என்று கூறிவிட்டாராம். 

ak 62

இதனால் இந்த கதை தயாரிப்பு நிறுவனமான லைக்காவிடம் கூற லண்டன் சென்றார். ஆனால் அங்கும் கதை திருப்தியில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து அஜித்தை, தனது அலுவலகத்திற்கு அழைத்த லைக்கா, விக்னேஷ் சிவன் கதை குறித்து விவாதித்திருக்கிறது. ஆனால் இந்த கதை பிடிக்கவில்லை என்று லைக்கா முன்னிலையிலே அஜித் கூறிவிட்டாராம். அதனால் தான் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் ‘ஏகே 62’ மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story