விஜய்க்கு அண்ணனாகும் 80-ஸ் பிரபல ஹீரோ... தகவலே தாறுமாறாக இருக்கே !

விஜய் 66 படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவான ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் விஜய்யின் 66-வது படத்தின் மீது ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் விழுந்துள்ளது. இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
‘தோழா’ படத்தின் இயக்குனர் வம்சி படைப்பள்ளி இப்படத்தை இயக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் படுஸ்பீடாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பூஜை போட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதோடு நடிகர் சரத்குமார் விஜய்க்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் கதைப்படி விஜய்க்கு இரண்டு அண்ணன் இருக்கின்றனர். அதில் ஒரு அண்ணனாக பிரகாஷ் ராஜுவும், மற்றொரு அண்ணனாக பிரபல நடிகர் மைக் மோகனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் மோகனை, இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது நீண்ட இடைவெளிக்கு ‘ஹரா’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.