விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பில் ‘அக்னி சிறகுகள்’... டீசர் குறித்த அறிவிப்பு !
விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அக்னி சிறகுகள்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘மூடர்கூடம்’ படத்தின் மூலம் பிரபலமான நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அக்னி சிறகுகள்’. இந்த படத்தில் முதல்முறையாக விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ளனர். மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் அக்ஷரா ஹாசன், சம்பத், சதீஷ்குமார், ரைமா சேனா, செண்ட்ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு உலகம் முழுவதும் உள்ள பல நகரங்களில் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் சில சிக்கல்களால் ரிலீசாகாமல் இருந்தது. இதையடுத்து இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் மே 27-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

