லோகேஷ் யூனிவர்சில் இணைய ஆசை - ‘லிகர்’ ப்ரோமோஷன் விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு !

Vijay Devarakonda

தமிழ் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லிகர்’. குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து உலக புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் நடித்துள்ளார். அதனால் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். 

Vijay Devarakonda

 இந்த படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Vijay Devarakonda

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய விஜய் தேவரகொண்டா, லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித் போன்ற தமிழ் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். இதுவரை எனது படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு வருகிறேன். 

லோகேஷ் அவரது யூனிவர்ஸை கொண்டு வந்தால் அதில் பயணிக்க தயாராக உள்ளேன். அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். தமிழ் ரசிகர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் எனது படங்களை தமிழில் வெளியிட நினைக்கிறேன் என்று தெரிவித்தார். 

Share this story