‘டிஎஸ்பி’-ஆக மிரட்ட வரும் விஜய் சேதுபதி... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

dsp

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் வியக்கத்தக்க நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர், தற்போது ஜவான், மேரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பொன்ராம் நடிப்பிலும் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். போலீஸ் கதைக்களம் கொண்ட இப்படத்தில் வாஸ்கோடகாமா என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். 

dsp

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திண்டுக்கல் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிரட்டும் லுக்கில் புல்லட்டில் கெத்தாக விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ‘டிஎஸ்பி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

இந்த மிஸ் இந்தியா அழகி அனு க்ரீத்தி கதாநாயகியாக நடிக்கிறார். 23 வயதேயாகும் இவர் பிரபல விளம்பர மாடலாக இருக்கிறார். இதுதவிர பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story