டி இமான் இசையில் ‘நல்லா இரும்மா’ பாடல்.. விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

nalla iruma

 விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’  படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘டிஎஸ்பி’. போலீஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்  வாஸ்கோடகாமா என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கெட்டப்பில் மிரட்டலான இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

nalla iruma

இந்த படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அனு க்ரீத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபாகர், ‘குக் வித் கோமாளி’  புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

nalla iruma

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டி இமான் இசையில் உருவாகி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. விஜய் முத்துபாண்டி எழுதிய இந்த பாடலை உதித் நாராயணன், செந்தில் கணேஷ், மாளவிகா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். 

Share this story