அடித்து நொறுக்கும் விஜய் சேதுபதி.. ‘டிஎஸ்பி’ மிரட்டலான டிரெய்லர் வெளியீடு

dsp

 விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிஎஸ்பி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நடிகர் விஜய் சேதுபதி வாஸ்கோடகாமா என்ற மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டிஎஸ்பி’. ஆக்ஷன் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தூள் கிளப்பும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

dsp

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு க்ரீத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபாகர், ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். 

இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டு படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். விஜய் சேதுபதியின் அடித்து நொறுக்கும் ஆக்ஷனில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story