விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தை பார்த்த சீமான்.. படக்குழுவினருக்கு பாராட்டு !

kadasi vivasayi movie

 விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தை பார்த்த இயக்குனர் சீமான், படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

சமூக நலன் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கடைசி விவசாயி’. ‘காக்கா முட்டை’  படத்தின் மூலம் பிரபலமான மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

kadasi vivasayi movie

விவசாயிகள் இன்னல்கள் குறித்து பேசியுள்ள இப்படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, பசுபதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். விவசாயிகளின் இன்னல்கள் குறித்து பேசியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

kadasi vivasayi movie

இப்படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி ஒன்று நேற்று பிரபல திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த காட்சியை நேற்று இயக்குனர் சீமான் பார்த்தார். படத்தை பார்த்த பிறகு விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினரை அவர் வெகுவாக பாராட்டினார். 

Share this story