சந்தானமாக நடிக்கும் விஜய் சேதுபதி... ‘விக்ரம்’ புதிய போஸ்டர் வெளியீடு !

vikram

‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் கேரக்டரில் நடித்துள்ள போஸ்டர் வெளியாகியுள்ளது. 

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் வெளியாக இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

vikram

இந்த படம் உலகம் முழுவதும் 5000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் நிலையில் 900 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. படத்தை திட்டமிட்டபடி வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

vikram

இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, சந்தானம் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story