விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு வெளிநாட்டில் சிக்கல்... திட்டமிட்டபடி வெளியாகுமா ?

varisu

 விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு வெளிநாட்டில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தில் ராஜூ தயாரித்த இந்த படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

varisu

அதேபோன்று இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளிநாடுகளுக்கான பிரதி தயாராகாததால் அமெரிக்கா, கனடா ஆகிய வெளிநாடுகளில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் திட்டமிட்டபடி வெளிநாடுகளில் ‘வாரிசு‘ படம் வெளியாகாது என்று தகவல் கசிந்துள்ளது. 

varisu

அதேநேரம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி வெளியாகிறது. இதனால் தமிழக ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த படத்தின் முதல் காட்சி வரும் 11-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்த சிறப்பு காட்சியின் டிக்கெட் விலை 2500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story