விஜய்யின் ‘வாரிசு’ டிரெய்லர் எப்போது ? வெளியானது புதிய அப்டேட்

thunivu

 விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்ற தகவல் குறித்த போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் படத்தில் முதல்முறையாக விஜய் நடித்துள்ளார். ‘வாரிசு’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வம்ஷி படைப்பள்ளி இயக்கியுள்ளார்.  இந்த படத்தில்  ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பூ, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தள்ளனர். 

thunivu

இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடும் இப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்கிற்கு வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. 

தமன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை அறிவிக்கும் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

Share this story