'வாரிசு' சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய விஜய்... படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் !

varisu

‘வாரிசு’ படத்தின் வெற்றியை விஜய் மற்றும் படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

varisu

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய்.‌ அவர்‌ நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வாரிசு'. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு வாரங்களை கடந்து திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது

varisu

இந்த படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.‌ பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. இந்த படத்தில் ஆக்ஷன், எமோஷனல், காதல் ஆகியவை இடம்பெற்றுள்ளது. தற்போது வரை இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

varisu

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விஜய் மற்றும் படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடினர்‌. அதில் சரத்குமார், ராதிகா, ராஷ்மிகா, இயக்குனர் வம்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  ‌

varisu

Share this story