தனது மனைவியை விவாகரத்து செய்தாரா விஜய் ?... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி !

vijay

மனைவியை நடிகர் விஜய் விவாகரத்து செய்ததாக வந்த தகவல் குறித்து புதிய விளக்கம் கிடைத்துள்ளது. 

தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் விஜய். பல மொழிகளில் ரசிகர்களை வைத்துள்ள அவர், தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தற்போது அவர் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

இதற்கிடையே தனது ரசிகையான டாக்டர் சங்கீதாவை கடந்த 22 ஆண்டுகளுக்கு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவி சங்கீதாவுடன் விஜய்க்கு கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

vijay

இதை உறுதிப்படுத்தும் விதமாக ‘வாரிசு’ ஆடியோ விழாவில் கூட சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை. அதேபோன்று இயக்குனர் அட்லீயின் வளைக்காப்பு நிகழ்ச்சியில் கூட விஜய் தனியாகவே வந்திருந்தார். மேலும் விக்கிபீடியாவில் சங்கீதாவுடன் விவாகரத்து ஆனதாகவே மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவாகரத்து விவகாரம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் அவரது குழந்தைகள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அதனால் தான் ‘வாரிசு’ ஆடியோ விழாவிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலால் விவாகரத்து விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 


 

Share this story