'வாரிசு' படத்தை பார்த்த விஜய்யின் அம்மா... வைரலாகும் புகைப்படங்கள்

varisu

'வாரிசு' படத்தை பிரபல திரையரங்கு ஒன்றில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் பார்த்து ரசித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது விஜய்யின் 'வாரிசு'. தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கலையொட்டி இந்த படம் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. 

 varisu

இந்த படத்தை பார்க்க நேற்று மாலையில் இருந்தே ரசிகர்கள் திரையரங்கு வாயில்களில் குவிந்து வந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரசிகர்கள் வாரிசு படத்தை வரவேற்க தயாராக இருந்தனர். இதையடுத்து சரியாக 4 மணிக்கு இந்த படம் வெளியானது. திரையரங்கு உள்ளே சென்ற ரசிகர்கள் விஜய் வரும் முதல் காட்சியை பார்த்தவுடன் உற்சாகமானார்கள். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியையும் பார்த்த ரசிகர்கள் கொண்டாடினர். 

varisu

இந்நிலையில் பிரபல திரையரங்கு ஒன்றில் 'வாரிசு' படத்தை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இன்று பார்த்தார். விஜய் வரும் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்து பார்த்தார். அப்போது விஜய்யின் அம்மாவோடு நடிகர் கணேஷ் வெங்கட்ராமனும், அவரது மனைவியும் இருந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

Share this story