செம்ம க்யூட்டாக இருக்கும் விஜய்.. 'வாரிசு' இரண்டாவது போஸ்டர் வெளியீடு !
விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'வாரிசு' படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜயின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. மூன்று அண்ணன் ஒரு தம்பி என்று குடும்ப கதையாக இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இலட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து இணையத்தில் டிரெண்ட் ஆனது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் செம க்யூட் லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வம்சி படைப்பள்ளி இயக்கி வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

