அப்பாவுடன் பிறந்தநாள் விஜயகாந்த் மகன்... கேக் ஊட்டி மகிழ்ச்சி !

vijaya prabhakaran

விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 vijaya prabhakaran

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகாந்த். ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ள அவர், தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார்.  சினிமாவை போல் அரசியலிலும் அசுர வளர்ச்சியை கண்டார். தீவிர அரசியலில் இருந்து வந்த அவர், உடல் நலக்குறைவால் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

vijaya prabhakaran

விஜயகாந்திற்கு இரு மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் விஜய பிரபாகரன் அரசியலிலும், இரண்டாவது மகன் சினிமாவிலும் இருந்து வருகின்றனர். தற்போது தந்தைக்கு பதில் தீவிர அரசியலில் விஜய பிரபாகர் இருந்து வருகிறார். அதேபோன்று தம்பி சண்முக பாண்டியன் போல் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். 

vijaya prabhakaran

இந்நிலையில் விஜய பிரபாகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்‌. இதையொட்டி தனது தந்தையுடன் இணைந்து எளிமையான முறையில் வீட்டில் பிறந்தநாள் கேக் வெட்டினார். அப்போது அப்பா விஜயகாந்திற்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்‌. இந்த நிகழ்வில் பிரேமலதா, சண்முகபாண்டியன் இருந்தனர். 

vijaya prabhakaran

Share this story