‘சன்னிதானம் P.O’ படத்தை கிளாப் அடித்து துவங்கி வைத்த 'விக்னேஷ் சிவன்' –அதுவும் எங்கு தெரியுமா?

photo

சன்னிதானம் PO’ படத்தின் பூஜையில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்துள்ளார். இதி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

 யோகிபாபு, பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும்  திரைப்படம் ‘சன்னிதானம் PO’. இந்தப்படத்தை  ராஜீவ் வைத்யா இயக்குகிறார். படத்தை சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சபரிமலையை பின்னணியாக கொண்டு தயாராகிவரும் இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது.

photo

இந்த நிலையில் மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் படத்தின் துவக்க விழா நடந்துள்ளது. இந்த விழாவை திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் அட்வகேட் அனந்தகோபன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து படத்தின் முதல் கிளாப்பை அடித்து  இயக்குநர் விக்னேஷ் சிவன் துவங்கி வைத்தார்படத்தின் மைய்யக் கரு  அங்கு பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து உருவாகிறது.

Share this story