நவ.7ல் ‘விக்ரம்’ 100வது நாள் வெற்றி விழா : ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு...

நவ.7ல் ‘விக்ரம்’ 100வது நாள் வெற்றி விழா : ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு...


உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் என  ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டெர்நேஷனல்  நிறுவனம் அறிவித்துள்ளது.  

vikram

இதுகுறித்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி  விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெகுவிமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றிபெற்ற விக்ரம் திரைப்படத்தின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழா நவம்பர் 7ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.  

நவ.7ல் ‘விக்ரம்’ 100வது நாள் வெற்றி விழா : ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு...

விக்ரம் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களும்,  ஆர்.மகேந்திரன் அவர்களும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த வெற்றி விழாவில், விக்ரம் படத்தில் பங்காற்றிய நடிகர்கள்,  தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

Share this story