விக்ரமின் ‘தங்கலான்’ படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா ?

Thangalan

 விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

பா ரஞ்சித்  மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

Thangalan

சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது.  கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சுமார் 35 கோடிக்கு இந்த ஓடிடி உரிமையை அந்நிறுவனம் பெற்றுள்ளது. 

 

Share this story