கேஜிஎப் செல்லும் விக்ரம்... 'தங்கலான்' படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்

thangalaan

'தங்கலான்' படப்பிடிப்பிற்காக விக்ரம் மற்றும் படக்குழுவினர் கேஜிஎப் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து புகழ்பெற்றவர் விக்ரம். அந்த வகையில் தற்போது பா ரஞ்சித், நடிகர் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் 'தங்கலான்'. கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ப்ரீயட் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். 

thangalaan

கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் இப்படத்தின் படப்பிடிப்பு கடப்பாவில் நடைபெற்றது. இதில் விக்ரம் மற்றும் பசுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் விக்ரம்‌ மற்றும் படக்குழுவினரின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து மாளவிகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னை படப்பிடிப்பை முடித்து நேரடியாக கேஜிஎப்பிற்கு படக்குழு செல்லவுள்ளது. அங்கு விக்ரம் மற்றும் பசுபதி நடிக்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. வரும் மார்ச்சுக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க பா ரஞ்சித் முடிவு செய்யப்பட்டுள்ளார்.‌ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story