விஷாலுடன் நடிக்கும் சிரிப்பு நடிகர்.. ‘மார்க் ஆண்டனி’ புதிய அப்டேட் !

mark antony

விஷாலின் நடிப்பில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘லத்தி’ பிறகு விஷால் நடிப்பில் வெறித்தனமாக உருவாகி வருகிறது ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

mark antony

இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். 

mark antony

ந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கு நடிகர் சுனில், ஓய்.ஜி.மகேந்திரன், நடிகை அபிநயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் மூலம் பிரபலமான அவர், ‘கோலமாவு கோகிலா’, ‘பீஸ்ட்’, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story