விஷால், எஸ்ஜே சூர்யா கூட்டணியின் 'மார்க் ஆண்டனி'... இன்று பூஜையுடன் துவக்கம்!
விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகும் 'மார்க் ஆண்டனி' படம் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 'மாநாடு' படத்தின் மூலம் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக இணைந்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் 1990-களில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. மேலும் படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவருமே இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.
இந்நிலையில் இன்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. படத்தின் பணிகள் இன்று முதல் துவங்குகின்றன. பூஜையில் விஷால், எஸ்ஜே சூர்யா, ஆதிக் மற்றும் தயாரிப்பாளர் வினோத் குமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.