ஆட்டத்துக்கு ரெடியா.. ‘கட்டா குஸ்தி’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷ்ணு விஷால் !

GattaKusthi

‘கட்டா குஸ்தி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அறிவிப்பை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். 

 விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து வருகின்றனர். செல்லா அய்யாவு இப்படத்தை இயக்கி வருகிறார். 

GattaKusthi

மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 

GattaKusthi

இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆட்டத்திற்கு ரெடியா’ என்ற தலைப்புடன் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

Share this story