புத்தாண்டில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு !

gatta kusthi

 விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக உள்ள விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமியும், கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

gatta kusthi

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்துள்ளனர். செல்லா அய்யாவு  இயக்கியுள்ள இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. 

இந்த படம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி  நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி புத்தாண்டையொட்டி இப்படம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடித்தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Share this story