விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்... முக்கிய அப்டேட் வெளியீடு 1

GattaKusthi

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘கட்டா குஸ்தி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் மல்யுத்தத்தை தவிர கபடி விளையாட்டை பற்றிய பேசப்பட்டுள்ளது. ஒரே படத்தில் இரண்டும் விளையாட்டை பற்றி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

GattaKusthi

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமியும், கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து வருகின்றனர். 

GattaKusthi

தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சால் சக்கா என தொடங்கும் இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story