நாளை வெளியாகும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ முக்கிய அறிவிப்பு !

GattaKusthi

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக உள்ள விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமியும், கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். 

GattaKusthi

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அதனால் இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து வெளியிடுகின்றனர்.

GattaKusthi

செல்லா அய்யாவு  இயக்கும் இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒரு பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது. இதற்கான அறிவிப்புதான் நாளை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story