என்னவா…. இருக்கும்? – நெட்பிளிக்ஸ் பதிவால் குழம்பி போன ரசிகர்கள்; இதுவாதான் இருக்குமோ.

photo

இன்றைய காலத்தில் டிஜிட்டல் தளங்கள் சினிமாத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிஜிட்டல் தளத்திற்காகவே பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஓடிடி தளமாக விளங்குகிறது நெட்பிளிக்ஸ்.

photo

நெட்பிளிக்ஸ் சவுத் தளம், இன்று தாங்கள் கைப்பற்றிய பலபடங்களின் உரிமைக்கான போஸ்டரை வெளியிட்டன. அந்த வரிசையில் தனுஷின் ‘வாத்தி’, விக்ரம்மின் ‘தங்கலான்’, சமுத்திரகனியின் ‘தலைக்கோதல்’, கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ , உதயநிதியின் ‘மாமன்னன்’,கார்த்தியின் ‘ஜப்பான்’, ஜெயம்ரவியின் ‘இறைவன்’ , ராகவா லாரன்ஸ்ஸின்’ சந்திரமுகி2’ குறிப்பாக அஜித்தின் ‘ஏகே 62’ ஆகிய படங்களாகும்.

photo

இந்தநிலையில் நெட்பிளிக்ஸ் இந்தியா சவுத் “ அப்டேட்ஸ் எல்லாம் முடிஞ்சிடிச்சுன்னு நினைச்சிங்களா? Big Update Coming Very Soon!!!”  என பதிவிட்டுள்ளனர். இந்த பதிவால் ரசிகர்கள் என்னவாக இருக்கும் என குழப்பத்தில் உள்ளனர். மற்ற சிலரோ ஒருவேளை இது லோகேஷ், விஜய்யின் அடுத்த படத்தை நெட்பிளிக்ஸ் தான் கைபற்றியிருப்பார்களோ என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

photo

Share this story