விஜய்சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ரிலீஸ் எப்போது?

ttn

மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனிடம்  உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர்.  இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவருடன் இணைந்து இயக்குனர்கள் மோகன் ராஜா,  மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் , நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

vijay sethupathi

வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இப்படம் பேசுகிறது . இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் வெளியீடு எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.



இந்நிலையில் விஜய்சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம், டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் இணையத்தில் இதற்கான போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர்.

Share this story

News Hub