விபத்திற்கு பிறகு மீண்டும் புதிய கார் வாங்கிய யாஷிகா.. என்ன கார் தெரியுமா ?

yashika

விபத்திற்கு பிறகு மீண்டும் புதிய கார் ஒன்றை நடிகை யாஷிகா வாங்கியுள்ளார். 

ரசிகர்களுக்கு தொடர்ந்து கவர்ச்சி விருந்து கொடுத்து வருபவர் நடிகை யாஷிகா. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே லைக்குகளை அள்ளி வருகிறது. 

yashika

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’,  ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

yashika

இப்படி பிசியான நடிகையாக இருந்த யாஷிகா, கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈசிஆர் சாலையில் சென்னை வந்துக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் உயிர் தோழி வள்ளி ஷெட்டி பவானி மரணமடைந்தார். பலத்த காயமடைந்த யாஷிகா சில மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்தார். 

yashika

 இந்த விபத்தில் யாஷிகாவின் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்நிலையில் விபத்து நடந்து ஓராண்டு கடந்த நிலையில் புதிய கார் ஒன்றை யாஷிகா வாங்கியுள்ளார். சுமார் 22.5 லட்சம் மதிப்புள்ள அந்த கார் Volkswagen Virtus டாப் எண்டு வகையாகும். 

 

Share this story