ஆங்கிலோ இந்தியன் பாட்டியாக மாறிய யோகிபாபு... ‘மிஸ் மேகி’ டைட்டில் டீசர் வெளியீடு !

miss maggi

வித்தியாசமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கும் ‘மிஸ் மேகி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வரும் அவர், ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். 

miss maggi

அந்த வரிசையில் தற்போது யோகிபாபு நடிக்கும் திரைப்படம் ‘மிஸ் மேகி’. ஆங்கிலோ இந்தியன் பாட்டி கதாபாத்திரத்தில் வித்தியாசமான லுக்கில் நடிகர் யோகிபாபு நடிக்கும் இந்த படத்தை லதா ஆர் மணியரசு இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

miss maggi

கார்த்திக் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் டிரம்ஸ்டிக்ஸ் பிரொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Share this story