'தாறுமாறு சாரு'... யோகிபாபுவின் 'தூக்குத்துரை' ஃப்ர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் !

Thookudurai

யோகிபாபுவின் 'தூக்குத்துரை' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் 'தூக்குத்துரை' படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இவர் ஏற்கனவே யோகிபாபுவின் 'ட்ரிப்' படத்தை இயக்கியவர். இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.

Thookudurai

இந்த படத்தில் யோகிபாபுக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். இவர்களுடன் மகேஷ் சுப்ரமணியம், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன், செண்ட் ராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.எஸ்.மனோஜ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மா இசையமைத்து வருகிறார். 

Thookudurai

ஓபன் கேட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் 'தாறுமாறு சாரு' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளகயாகியுள்ளது. மோகன்ராஜா என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார். அசத்தலான உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story