புதியதோர் கதைக்களத்தில் யோகிபாபு.. ‘பொம்மை நாயகி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

bommai nayagi

யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி‘. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை. அதனால் மலை சார்ந்த இடமான தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

bommai nayagi

 இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல காமெடி நடிகராக யோகிபாபு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது ஒரு பெண் குழந்தையின் தந்தையாக யோகிபாபுவும், அவரது மகளாக ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீமதி நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

bommai nayagi

தற்போது இந்த படத்தின்  இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story