யோகிபாபுவின் வித்தியாசமான நடிப்பில் ‘பொம்மை நாயகி’.. முக்கிய அறிவிப்பு வெளியீடு !

BommaiNayagi

 யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல காமெடி நடிகரான யோகிபாபு, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொம்மை ‘நாயகி’. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை. 

BommaiNayagi

இந்த படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்திலும், அவரது மகளாக ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீமதி நடித்துள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்கி வருகிறார்.சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

 இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் உள்ள மலை கிராமங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின்  இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Share this story