காமெடி நடிகர் 'தாடி பாலாஜி'யின் மனைவி 'நித்யா' கைது – வசமாக சிக்கிய சிசிடிவி ஆதாரம்.

photo

கோலிவுட்டில் காமெடி நடிகராக அறியப்படுபவர் தாடி பாலாஜி. இவர் நடிப்பதை கடந்து நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், காமெடி நிகழ்ச்சிகளின் நடுவராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளர்காளாக கலந்து கொண்டார், குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த  தாடி பாலாஜி,நித்தியா தம்பதி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

photo

இந்த நிலையில் நித்தியா தனது மகள் போஷிகாவுடன் மாதாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வசித்து வருவதாவும் அவருக்கும் நித்யாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நித்யா,நேற்று தனது எதிர்வீட்டு உரிமையாளரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தி உள்ளார்.

photo

ஓய்வு பெற்ற ஆசிரியர்  காலையில் காரை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நித்தியா காரை கற்களை கொண்டு தாக்குவது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாதாவரம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு நித்யாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

photo

Share this story