'பெருசு' படத்திற்கு 'A' சான்று... ஜாலியாக ZOOM காலில் உரையாடிய படக்குழு..!

கார்த்திக் சுப்பரா தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள 'பெருசு' படத்திற்கு 'A' சான்று வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். தற்போது இவரது இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது மே 1-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனராக மட்டுமில்லாமல் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். அதன்படி, மேயாத மான், மெர்குரி, பென்குயின் உள்ளிட்ட படங்களை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார்.
இதனையடுத்து, அவர் தயாரிக்கும் 16- வது திரைப்படத்தில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 'பெருசு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. இப்படம் வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
So #Perusu gets an 'A' Certificate....
— karthik subbaraj (@karthiksubbaraj) March 5, 2025
And I got on a Zoom Call ...🙂#PerusufromMarch14 pic.twitter.com/mB3vgy1a8d
இந்த நிலையில் பெருசு' படத்திற்கு பெருசு படத்திற்கு தணிக்கை குழுவினர் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக நடிகர் வைபவ், நடிகர் சுனில், நடிகை நிஹரிகா, தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ஜூம் காலில் பேசிய ப்ரோமோஷன் விடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது. இப்படம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசிக்கும் குடும்ப படமாக இருக்கும் என்று அந்த வீடியோவில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.