ஷியாம் நடிக்கும் 'அஸ்திரம்' படத்திற்கு 'ஏ' சான்று

sham

ஷியாம் நடிக்கும் அஸ்திரம் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ'  சான்று வழங்கியுள்ளது. 
நடிகர் ஷியாம் தமிழ் சினிமாவில் 12பி, இயற்கை, லேசா லேசா ஆகிய படங்களை ஹீரோவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஆஸ்திரம். இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க பைவ் ஸ்டார் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் ஷியாம் தவிர நிரா, வெண்பா, நிழல்கள் ரவி, ஜிவா ரவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.



இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. ஏற்கனவே இப்படத்தின் ரிலீஸ் தேதி 2 முறை மாற்றப்பட்ட நிலையில், தற்போது இப்படம் வருகிற 7-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்  இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. 

Share this story