முன்னாள் ஜனாதிபதி மற்றும் ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கலாம் வாழ்க்கை திரைப்படமாகிறது!
முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் தயாரிக்க உள்ளார். விக்ஞானியன் என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. “கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது பணியாளராக இருந்த கேப்டன் பிரகாஷ்குமார், அவர் மறைவுக்குப் பிறகு தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நான் அவருடன் சேர்ந்தேன். நாங்கள் திரைக்கதையை முடித்துவிட்டோம், தற்போது குணா போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய சப் ஜான் இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகிறார்.
நம் நாட்டின் அறிவியலின் முன்னேற்றத்தில் அவரது பங்கை இந்தத் திரைப்படம் விவரிக்கும். அவர் நம்மை தொழில்நுட்பத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றார், ”என்று படத்தின் இயக்குனர் கூறுகிறார்.
விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் மற்றும் பலர் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும், நமது நாட்டின் பாதுகாப்பு துறையில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் நாங்கள் படத்தில் காண்பிக்க உள்ளோம். ஸ்ரீகுமார் சிப்ஸ், கலாம் அவர்களுடன் ஜூனியராக சேர்ந்தார், பின்னர் பல பணிகளுக்கு தலைமை தாங்கினார். பொக்ரான் சோதனையில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. கலாம் எப்படி வலுவான இந்தியாவை உருவாக்கினார் என்பதை நாங்கள் அடிப்படையில் இருந்து காண்பிக்க உள்ளோம்.
நாசாவின் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரிடமிருந்தும், விங்ஸ் ஆஃப் ஃபயர் உடன் இணைந்து எழுதிய அருண் திவாரியிடம் இருந்தும் நாங்கள் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளோம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கலாம் கதாபாத்திரத்தில் நடிக்க மூன்று கோலிவுட் நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். தமிழில் இந்தப் படம் பிரதானமாக உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.