ஆதி நடித்த 'சப்தம்' படத்தின் 2-வது பாடல் வெளியானது

aadhi

ஆதி நடித்த ‘சப்தம் படத்தின் 2-வது பாடல்  வெளியாகி உள்ளது. 

ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஈரம் எனும் திரைப்படம் வெளியானது. அறிவழகன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தது இயக்குனர் அறிவழகன், மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்து சப்தம் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம் எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


இந்த படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஈரம் படத்தைப் போலவே இந்த படமும் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஏற்கனவே நிறைவடைந்து படமானது வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து மாயா மாயா எனும் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தநிலையில், இப்படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது.
 

 

 

Share this story