ஆதி நடிப்பில் உருவாகும் ‘சப்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

aadhi

ஆதி நடிப்பில் உருவாகும் சப்தம் படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான மரகத நாணயம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இவர், அறிவழகன் இயக்கத்தில் ஈரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

aadhi

அதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அறிவழகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் ஆதி. இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு சப்தம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஈரம் படத்தை போல் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமி மேனன், சிம்ரன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை 7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இதற்கு இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

aadhi

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story