வைரலாகும் ஆடு ஜீவிதம் போஸ்டர்

வைரலாகும் ஆடு ஜீவிதம் போஸ்டர் 

பிரித்திவிராஜ், மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றவர். மேலும் இவர் லூசிபர், ப்ரோ டாடி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி இருந்தார். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் ஆடு ஜீவிதம். பென்‌ யாமின்‌ எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்

வைரலாகும் ஆடு ஜீவிதம் போஸ்டர் 

இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Share this story